கான்பூரில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு; நிபுணர் குழு  விரைவு

கான்பூரில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு; நிபுணர் குழு  விரைவு
Updated on
1 min read

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பியது

உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கடந்த 22-ம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை மருத்துவர் நிபுணர் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளைச் சேர்ந்த பொது சுகாதாரம், பூச்சியியல், மகப்பேறு, நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஜிகா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தக் குழுவினர், மாநில சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவர்.

இந்தக் குழு மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு நிலைமையைக் கண்காணிக்கும் மற்றும் ஜிகா மேலாண்மைக்கான மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயல்திட்டம், இங்கு அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் இந்தக் குழு மதிப்பீடு செய்யும்.

உத்தரப்பிரதேசத்தில் ஜிகா மேலாண்மைக்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in