காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் மகன் சாகெத் பகுகுணா கட்சியில் இருந்து நீக்கம்: உத்தராகண்ட் மாநிலத்தில் குழப்பம்

காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் மகன் சாகெத் பகுகுணா கட்சியில் இருந்து நீக்கம்: உத்தராகண்ட் மாநிலத்தில் குழப்பம்
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் மகன் சாகெத் பகுகுணா கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஹரீஷ் ராவத் பதவி வகிக்கிறார். இந்நிலையில் காங் கிரஸ் எம்எல்ஏ.க்கள் 9 பேர் முதல் வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற் கிடையில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 9 பேரின் துணையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. எனினும், 9 எம்எல்ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

உத்தராகண்ட் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் பகுகுணா, மாநில முதல்வராக பதவி வகித்தவர். இவரது மகன் சாகெத் பகுகுணாவும் கட்சியில் இருக்கிறார். ஆனால், அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு தலைமை தாங்கி பாஜக.வுக்கு ஆதரவாக சாகெத் செயல்பட்டு வருகிறார். இதனால், கட்சியில் இருந்து இவரை காங்கிரஸ் மேலிடம் 6 ஆண்டுகள் நீக்கி உள்ளது. அதேபோல் மாநில செயலாளர் அனில் குப்தாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிராக சாகெத், குப்தா ஆகிய இருவரும் செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக மேலிடம் தெரிவித்துள்ளது. அத் துடன் 9 மாவட்ட காங்கிரஸ் அமைப்பையும் மாநில தலைமை கலைத்துள்ளது. இதனால் உத்தரா கண்ட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 71 இடங்களில், 36 எம்எல்ஏ.க்கள் பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 9 பேர் இப்போது கட்சிக்கு எதிராக கிளம்பி உள்ளதால், காங்கிரஸின் பலம் 27 ஆக சரிந்துள்ளது. இந்நிலையில், 27 எம்எல்ஏ.க்களை வைத்துள்ள பாஜக, 9 அதிருப்தி எம்எல்ஏ.க் களையும் சேர்த்து தங்களுக்கு 36 பேரின் பலம் உள்ளது. எனவே, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநர் கிருஷ்ணகாந்த்திடம் கோரியுள்ளது.

மேலும், 36 எம்எல்ஏ.க்களும் பாஜக தலைவர்கள் தலைமையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை விரைவில் சந்தித்து முறையிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in