கோவா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

கோவா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ப.சிதம்பரம் நம்பிக்கை
Updated on
1 min read

கோவா சட்டப் பேரவைக்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று கூறியதாவது:

கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஓரளவு மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியைத் தூக்கி எறியும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

வரும் தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த5 மாநிலத் தேர்தலுமே காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானவை. குறிப்பாக கோவா மாநிலம் காங்கிரஸுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கும், கோவாமக்களுக்கும் இடையே நீண்டகால சிறப்பு பிணைப்பு உள்ளது.கோவா மக்களின் மனதை காங்கிரஸ் கட்சி புரிந்து வைத்துள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தேர்தலில் அமோக வெற்றிபெறுவதற்கான அணுகுமுறை களை கட்சி கையாளும்.

பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சேர்க்க உத்தேசமிட்டுள்ளோம். ஆனால் எந்தக் கட்சி என்று இப்போது சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in