பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5 வது நாளாக கிடுகிடு உயர்வு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கடந்த சில நாட்களாக திடீரென பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தேசியத் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 0.35 உயர்ந்து லிட்டருக்கு ரூ.107.59 ஆகவும், ரூ .96.32 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கடந்த சில தினங்களில் குறிப்பாக, தொடர்ந்து 5 வது நாளாக நாட்டில் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் கிடுகிடு விலை உயர்வை எட்டிவருகிறது,

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் (OMC கள்) இந்த வாரம் நாடு முழுவதும் எரிபொருள் விலைகள் ஐந்தாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர்த்தப்பட்டுள்ளன.

இன்று, தேசிய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 0.35 உயர்ந்து லிட்டருக்கு ரூ.107.59 ஆகவும், ரூ .96.32 ஆகவும் உயர்த்தப்பட்டது.

மும்பையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 113.46 இருந்தது, இன்று 113.12 எனக் குறைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 104.38 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. நேற்று மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.104 ஆக இருந்தது.

கொல்கத்தாவில் ரூ.108.11 மற்றும் ரூ.99.43; தமிழ்நாட்டில் சென்னையில் ரூ. 104.52 & ரூ .100.59 எனவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்,ரூ.104.52க்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.100.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கடந்த நேற்று முன்தினம் முதல் பெட்ரோல் லிட்டர் 115.62 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 104.98 ரூபாய்க்கும் விலை அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in