Published : 24 Oct 2021 12:50 PM
Last Updated : 24 Oct 2021 12:50 PM

10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியில் புதிதாக உறுப்பினராகச் சேர்வோருக்கு மதுப் பழக்கம் இருக்கக் கூடாது, போதைமருந்து பயன்படுத்தக்கூடாது, குறிப்பாக கட்சியை ஒருபோதும், பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது போன்ற விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி நவம்பர் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச்31ம் தேதிவரை புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் புதிய தலைவரையும் தேர்ந்தெடுக்க உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் புதிதாகச் சேர்வோர் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் இடம் கிடைக்கும். அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டபின்புதான் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

இதில் முக்கியமானது, கட்சியில் உறுப்பினராகச் சேர்வோர் சட்டத்துக்கு அதிகமான அளவில் கூடுதலாகச் சொத்து வைத்திருக்கக்கூடாது, கட்சிக்காக எந்த இடத்திலும் இறங்கி களப்பணியாற்ற வேண்டு் என்பதாகும். இதற்கிடையே வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடி, புதிய உறுப்பினர்களைச் சேர்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

  1. புதிய உறுப்பினருக்கான 10 விதிகள்
  2. அங்கீகரி்க்கப்பட்ட காதி ஆடைகளை தொடர்ந்து அணிவதை பழக்கமாகக் கொள்வேன்
  3. எந்த மது வகைகளையும் குடிக்கமாட்டேன், போதை மருந்துகளையும் பயன்படுத்தமாட்டேன்.
  4. சமூகரீதியான பாகுபாட்டை எந்தரீதியிலும் , எந்தவடிவத்திலும் பின்பற்றமாட்டேன் நம்பமாட்டேன். யாரையும் நீக்கவும் பயன்படுத்தமாட்டேன்
  5. மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி ஒருங்கிணைந்த சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
  6. காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி இடும் ஆணைக்கு இணங்க குறைந்தபட்சம் களப்பணியாளராக நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.
  7. சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருக்கமாட்டேன்
  8. மதச்சார்பின்மை, சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் கொள்கைகளை பரப்பும் நோக்கில் நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.
  9. கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை, திட்டங்களை, கட்சி்க்கு உரிய வழிமுறை தவிர்த்து வேறு எந்த வழியிலும், பொதுவெளியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்மறையாக விமர்சிக்கமாட்டேன்.
  10. அனைத்து இந்தியர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அதை முன்னிறுத்தியே உழைப்பேன்.

ஆகிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x