

காங்கிரஸ் கட்சியில் புதிதாக உறுப்பினராகச் சேர்வோருக்கு மதுப் பழக்கம் இருக்கக் கூடாது, போதைமருந்து பயன்படுத்தக்கூடாது, குறிப்பாக கட்சியை ஒருபோதும், பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது போன்ற விதிமுறைகளை விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சி நவம்பர் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச்31ம் தேதிவரை புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் புதிய தலைவரையும் தேர்ந்தெடுக்க உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் புதிதாகச் சேர்வோர் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் இடம் கிடைக்கும். அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டபின்புதான் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.
இதில் முக்கியமானது, கட்சியில் உறுப்பினராகச் சேர்வோர் சட்டத்துக்கு அதிகமான அளவில் கூடுதலாகச் சொத்து வைத்திருக்கக்கூடாது, கட்சிக்காக எந்த இடத்திலும் இறங்கி களப்பணியாற்ற வேண்டு் என்பதாகும். இதற்கிடையே வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடி, புதிய உறுப்பினர்களைச் சேர்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.
ஆகிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.