Last Updated : 24 Oct, 2021 03:06 AM

 

Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

கர்நாடக இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி: முதல்வர் பசவராஜ் பொம்மை தீவிர பிரச்சாரம்

கர்நாடகாவில் நடைபெறும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான‌ இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியகட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 30-ம் தேதி சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பெரும் எதிர்பார்ப்பு

அடுத்த சட்டப்பேரவைத் தேர் தலுக்கு முன்னோட்டமாகவும், பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு நடைபெறும் முதல் தேர்தலாக இருப்ப‌தாலும் இந்த இடைத்தேர்தல் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதில் பாஜக‌வை வெற்றி பெற வைத்து தனது தலைமையை நிலைநாட்ட வேண்டும் என்பதால் முதல்வர் பசவராஜ் பொம்மை முழு வீச்சில் களமிறங்கியுள்ளார்.

தலைவர்கள் மும்முரம்

இரு தொகுதிகளிலும் மழை, வெயிலை பொருட்படுத்தாமல் பசவராஜ் பொம்மை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல அனைத்து அமைச்சர்களையும், பாஜக மூத்த தலை வர்களையும் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார்.

அதேபோல முன்னாள் முதல்வர்கள் சித்தராமையாவும், குமாரசாமியும் தங்களது கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்பதற் காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x