ஆந்திர மாநில வெள்ளத்தில் வேன் மூழ்கி கர்நாடக புது மணப்பெண் உயிரிழப்பு

ஆந்திர மாநில வெள்ளத்தில் வேன் மூழ்கி கர்நாடக புது மணப்பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூரிலிருந்து திருமணமாகி ஒரு மாதமான நிலையில் சந்தியா (22) மற்றும் அவரது கணவர், சகோதரர், அவரது மனைவி, தாயார், சகோதரரின் 2 வயது மகள் என மொத்தம் 7 பேர் ஒரு வேனில் வெள்ளிக்கிழமை இரவு ஆந்திரா புறப்பட்டனர் ஏற்கெனவே ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் வந்த வேன், ஒரு பாலத்தின் கீழே சென்ற போது வெள்ளம் வடிய திறந்து வைக்கப்பட்டிருந்த கால்வாயில் சிக்கிக் கொண்டது. வேன் உயரத்துக்கு மழை நீர் இருந்ததால், வேனில் இருந்த 7 பேரும் வெள்ளத்தில் சிக்கி அலறினர். உடனே அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று அனைவரையும் காப்பாற்றினர். ஆனால், புது மணப்பெண் சந்தியா மட்டும் வேனில் இருந்தபடியே வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

2 வயது குழந்தையின் நிலைமையும் கவலைக்கிடமாக இருந்ததால், ருய்யா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து திருப்பதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in