

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர்.
அதுபோலவே என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த அக்டோபர் 13-ந்தேதி நேரில் சந்தித்தார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீரென சென்றார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பிரதமரிடம் பேசியதாக தெரிகிறது.