இந்தியாவில் ஒரே நாளில் 15,786 பேருக்கு கரோனா தொற்று; 231 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 15,786 பேருக்கு கரோனா தொற்று; 231 பேர் பலி
Updated on
1 min read

இந்தியாவில் புதிதாக மேலும் 15,786 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 231 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,786. இதில் கேரளாவில் மட்டும் 8,733 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 34,143,236.

இதுவரை குணமடைந்தோர்: 33,514,449.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 18,641.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 231. இதில் கேரளாவில் 118 பேர் உயிரிழப்பு.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,52,651.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,75,745. இது கடந்த 232 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 100.59 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.16% ஆக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்குப் பின்னர் மிகவும் அதிகமான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு.

தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.19% ஆக உள்ளது. இதுவும் கடந்த 53 நாட்களாக 50%க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in