பிரியங்காவுடன் செல்பி எடுத்த பெண் காவலர்கள்: உத்தர பிரதேசத்தில் வீடியோ வைரலானதால் சிக்கல்

பிரியங்காவுடன் செல்பி எடுத்த பெண் காவலர்கள்: உத்தர பிரதேசத்தில் வீடியோ வைரலானதால் சிக்கல்
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.25 லட்சம் திருடப்பட்டது. இவ்வழக்கில் சந்தேகிக்கப்பட்ட அருண் வால்மீகி எனும் துப்புரவுப் பணியாளர் காவல் நிலைய விசாரணையின் போது மரணமடைந்தார்.

அதன்பின் அவரது குடும்பத் தாரை சந்திக்க உ.பி. காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான பிரியங்கா வத்ரா. நேற்று முன்தினம் புறப்பட்டார். அவரை தாஜ் எக்ஸ்பிரஸ்வே சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, தன் வாகனத்தை சுற்றியிருந்த சில பெண் காவலர்களை பார்த்த பிரியங்கா, லேசாக புன்முறுவல் பூத்துள்ளார். இதில், உற்சாகமடைந்த பெண் காவலர்கள், பிரியங்காவுடன் செல்பி எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைர லானதால் பிரியங்காவுடன் படம் எடுத்துக் கொண்ட பெண் காவலர்கள் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க லக்னோ மாநகர காவல் துறை உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் காவலர்களின் பணி பற்றிய விவரங்களை காவல் துறை திரட்டுவதாகத் தகவல் பரவியது.

இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில், ‘‘பெண் காவலர்கள் எடுத்த செல்பி முதல்வர் யோகியை கவலைக் குள்ளாக்கி விட்டதாக அறிந்தேன். இதற்காக அக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் விரும்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. என்னுடன் நின்று ஒரு படம்எடுத்துக் கொள்வது பாவச்செயலா? இது தவறு எனில் நானும் தண்டனைக்குரியவள் தான்? இதன்மூலம், கடமை உணர்ச்சி கொண்ட அந்த காவலர்களின் எதிர்காலத்தை பாழாக்க முயல்வது உபி அரசிற்கு அழகல்ல’’ என குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிக்கு உதவி

சில மணி நேரத் தடைக்கு பின் ஆக்ரா கிளம்பிய பிரியங்கா, மற்றொரு சம்பவத்திலும் செய்தியானார். வழியில் ஒரு சிறுமி விபத்தில் சிக்கி காயம் அடைந்திருந்தார். இதைக் கண்டு தன்வாகனத்தை நிறுத்தியப் பிரியங்கா,அச்சிறுமியை தனது வாகனத்தில் அமர்த்தி முதல் உதவி சிகிச்சைசெய்தார். பிறகு தன்னுடன் வந்தமற்றொரு வாகனத்தில் அச்சிறுமியை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார். இத்துடன் தனது கைப்பேசி எண்ணை அச்சிறுமியிடம் அளித்து மேலும் உதவிகளுக்கு தன்னை அழைக்குமாறும் கூறிச் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in