

வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது பறக்கும் படையினரின் நட வடிக்கைகளை கண்காணிப்பதற் காக, ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி கூறிய தாவது:
தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தால், அந்த இடத்துக்கு பறக்கும் படையினரை அனுப்பி வைப்போம். ஆனால் சில நேரங்களில் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு செல்லாமல் தவிர்த்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்து பறக்கும் படை மற்றும் நடமாடும் குழுக்களுடன் மத்திய காவல் படையினர் அனுப்பி வைக்கப்படு வர். மேலும் இவர்களது வாகனங் களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படும். இதன்மூலம் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு பறக்கும் படையினர் சென்றார் களா இல்லையா என்பதைக் கண்காணிக்க முடியும்.
குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் செய்யும் முறைகேடுகளுக்கு பறக்கும் படை யினர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த ஜிபிஎஸ் முறை உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.