பேசும் முன் தரவுகளை சரிபார்த்தீர்களா?- கண்ணய்யாவை கலவரப்படுத்திய பேராசிரியரின் கேள்வி

பேசும் முன் தரவுகளை சரிபார்த்தீர்களா?- கண்ணய்யாவை கலவரப்படுத்திய பேராசிரியரின் கேள்வி
Updated on
1 min read

கண்ணய்யா குமார் தனது புகழ்பெற்ற பேச்சைத் தயாரிக்கும் முன் வரலாற்றுத் தரவுகளை சரிபார்த்தாரா என்று ஜேஎன்யூ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரும், கவிஞருமான மகரந்த் பராஞ்ஜ்பே கேள்வி எழுப்பினார்.

ஜேஎன்யூ பல்கலைக் கழக மாணவர்களிடம் பேசிய பராஞ்ஜ்பே, “கோல்வால்க்கர், முசோலினியைச் சந்தித்தார் என்று கண்ணய்யா குமார் கூறினார். தரவுகளை சரிபார்த்தாரா அவர்? மாறாக, மூஞ்சே என்பவர்தான் முசோலினியைச் சந்தித்தார். பாசிசத்தினால் அவர்கள் கவரப்படவில்லை என்று நான் கூறவில்லை, அவர்களுக்கு பாசிசத்தின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ஒரு எதேச்சதிகார அமைப்பு இருப்பது நல்லது என்று அவர்கள் கருதினர்.

எனவே, தயவுகூர்ந்து நாம் எது உண்மை, எது உண்மையல்ல என்பதில் உடன்படுவோம். பாசிசம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான நிலைப்பாடு, ஸ்டாலினியமும் அவ்வாறுதான்.

ஒரு நீதித்துறை கொலை (அப்சல் குரு) இங்கு பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ள இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமையடைகிறேன். ஸ்டாலினின் ரஷ்யாவில் 1920-1950-களில் எவ்வளவு நீதித்துறை கொலைகள் நடந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சுமார் 10 லட்சம் கொலைகள். கிரிமினல் மற்றும் சிவில் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்! 34,000 பேர்” என்றார்.

இங்கு பேசிய மற்றவர்கள் போல் பேராசிரியர் பராஞ்ஜ்பே, தேசியவாதம் பற்றிய விவாதத்தில் இடது சாரி சார்பு நிலையெடுக்கவில்லை. இவர் பேசும்போது கண்ணய்யா குமார் கோஷம் எழுப்பி இடைமறிப்பு செய்தார், மற்ற சில மாணவர்களும் பேராசிரியர் பேசும் போது கேலி செய்யும் விதமாக குரல் எழுப்பினர்.

மேலும் கண்ணய்யா குமார் தலைமையில் பராஞ்ஜ்பேயிடம் மாணவர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனாலும் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் கண்ணய்யா குமார் பேசிய போது செய்த தவறான தகவல்களை கேள்விக்குட்படுத்தினார்.

சிவில் அல்லாத யுத்தங்கள்: தாகூர், காந்தி, ஜே.என்.யூ. என்ற தலைப்பில் பேசிய பராஞ்ஜ்பே, ‘நாம்தான் ஜனநாயக வெளி என்று நம்மை நாம் கருதிக்கொள்ளும் முன் இது உண்மைதானா என்பதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். இது இடதுசாரி ஆதிக்கவாத வெளி என்ற சாத்தியம் இல்லாத இடமா? இந்த ஆதிக்க வெளியிலும்தான் எதிர்கருத்து ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, அப்படி தெரிவிப்பவர் மவுனத்திற்குள் தள்ளப்படுகிறார். புறக்கணிக்கப்படுகிறார்... ஆனாலும் ஜே.என்.யூ-வையும் நேசிக்கிறேன்” என்றார்.

இவரது பேச்சுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது ஆனால் ஜே.என்.யூ. மாணவர் துணைத் தலைவர் ஷீலா ரஷித் மாணவர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in