ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்: இரோம் சர்மிளா மீண்டும் கைது

ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்: இரோம் சர்மிளா மீண்டும் கைது
Updated on
1 min read

வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்கக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இரோம் சர்மிளா நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அசாம், மணிப்பூர் உள்பட 7 சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் என கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக தற்கொலைக்கு முயல்வதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். மேலும் மூக்கு வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவு அளித்து வருகின்றனர்.

இரோம் சர்மிளா தற்கொலைக்கு முயலவில்லை என நீதிமன்றம் கடந்த வாரம் விடுதலை செய்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இரோம் சர்மிளா, உடனடியாக கடந்த திங்கள் அன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, போலீஸார் மீண்டும் அதே வழக்கில் இரோம் சர்மிளாவை நேற்று கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இம்பாலில் உள்ள ஜவஹர்லால் மருத்துவமனை யில் தனிப் பிரிவில் இரோம் சர்மிளா கடந்த 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in