

குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.
இந்த விமான நிலையம் அதன் அருகில் உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாருக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும். குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அபிதாம்மா தினத்தையொட்டி மகாபரிநிர்வானா கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அதன் பின் குஷிநகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர், குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினைப் பொருட்கள், புத்த சூத்திரங்களின் கையெழுத்துப் பிரதியையும் பார்வையிடுகிறார்.