

திருமலை – திருப்பதி மலைப் பாதையில் உள்ள மின்கம்பத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்ததால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.
திருமலையில் இருந்து திருப் பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே உள்ள மின் கம்பம் திடீரென தீப்பிடித்து எரிந் தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், மின் கம்பத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். விபத்து காரணமாக அரை மணி நேரம் வரை போக்குவரத்து தடைபட்டதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.