

குஜராத்தில் 10 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாகிஸ் தான் உளவுத்துறை இந்திய அரசிடம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு, கண் காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை, எல்லை பாதுகாப்புப் படை ஆகியோ ருடன் இணைந்து குஜராத் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீவிரவாத தாக்குதலை முறியடிக்க தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 படைப்பிரிவுகள் குஜராத் தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.
பாக். உளவுத்துறை தகவல்
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்பு கொண்டு, குஜராத்தில் 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப் பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உச்சகட்ட பாதுகாப்பு
இந்த எச்சரிக்கையை அடுத்து குஜராத் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாநில டிஜிபி தாக்குர் தலை மையில் ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப் படை, எல்லை பாதுகாப்புப் படை, மாநில போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற உயர் நிலைக் கூட்டம் அகமதாபாதில் நேற்று நடைபெற்றது.
தீவிரவாத தாக்குதலை முறியடிக்க தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 படைப் பிரிவுகள் குஜராத்தில் முகாமிட் டுள்ளன. இதில் ஒரு படைப்பிரிவு குஜராத்தின் புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதர 3 படைப்பிரிவுகள் அகமதாபாதில் முகாமிட்டுள்ளன.
படகு பறிமுதல்
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கட்ச் கடற்கரையில் கோட்டேஸ்வர் கிரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது மீன்பிடிப் படகில் இருந்த சிலர் தப்பியோடி உள்ளனர். கேட்பாரற்று நின்ற அந்தப் படகு பறிமுதல் செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 3 மாதங்களில் கட்ச் கடற்கரைப் பகுதியில் இதுவரை 5 மர்ம படகுகள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.
சிவராத்திரி விழா
குஜராத்தின் முக்கிய கோயில் களில் இன்று சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாக்களை சீர்குலைக்கும் நோக்கில் தீவிரவாதிகள் ஊடுரு வியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக சோமநாதர் கோயில், துவாரகா கோயில், அக் ஷர்தாம் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோமநாதர் கோயிலில் நடக்க இருந்த கலை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட் டுள்ளன.
டெல்லியில் உஷார் நிலை
குஜராத்தை போன்று டெல்லியி லும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலை யில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.
இதனிடையே கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தை 24 மணி நேரத்தில் தகர்ப்போம் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த இ-மெயில் ஜெர்மனி யில் இருந்து அனுப்பப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.