Published : 18 Oct 2021 05:16 PM
Last Updated : 18 Oct 2021 05:16 PM

‘‘நேரு குடும்பத்தை புகழ சர்தார் படேலை இகழ்வதா?’’- காங்கிரஸுக்கு பாஜக சரமாரிக் கேள்வி

சர்தார் பட்டேல்

புதுடெல்லி

நேரு குடும்பத்தை புகழ வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சர்தார் படேல் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘சர்தார் பட்டேல் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவை சந்தித்தார்.
சர்தார் படேல் ஜம்மு -காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்பினார். ஜவஹர்லால் நேரு ஜம்மு -காஷ்மீரை இந்தியாவில் வைத்திருக்க விரும்பினார்’’ என்று அவர் பேசியுள்ளார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தலைவர் சர்தார் வல்லப் பாய் படேலை அவதூறாகப் பேசியுள்ளார். இதுபற்றி இன்று செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த அந்த காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா. சர்தார் பட்டேல் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவை சந்தித்தாக அவர் கூறியுள்ளார்.

சர்தார் படேல் ஜம்மு -காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்பினார், ஜவஹர்லால் நேரு ஜம்மு -காஷ்மீரை இந்தியாவில் வைத்திருக்க விரும்பினார் என்றும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் சர்தார் படேல் பேசப்பட்ட விதம் வன்மையாக கண்டிக்க தக்கது. சோனியா காந்தி இது குறித்து ஏதாவது சொன்னாரா? காந்தி குடும்பத்தின் மீது காங்கிரஸ் தலைவரின் பற்று காரணமாக பட்டேல் அவமதிக்கப்பட்டார்.

கர்ரா கண்டிக்கப்பட்டாரா? அவர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்படுவாரா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குடும்பம் எல்லாவற்றையும் செய்தது, மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை என்பது என்ன வகையான மனநிலை. காங்கிரஸ் காரிய கமிட்டியில் முழுக்க முழுக்க படேலுக்கு அவமானம் இழைகக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பத்ரா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x