காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ வீரர் காணவில்லை

காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ வீரர் காணவில்லை
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே மாவட்டம், துர்துக் என்ற கிராமத்தில் நேற்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது.

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். இதில் படுகாயம் அடைந்த டார்ஜிலிங்கை சேர்ந்த வீரர் பவன் தமாங் பரிதாப மாக இறந்தார். மற்றொரு வீரரை காணவில்லை. இவரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உயரமான மலைப் பகுதிகளில் (3 ஆயிரம் மீட்டர்) பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் நேற்று காலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குப்வாரா, பாரமுல்லா, பண்டிபூர், கார்கில், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சண்டீகரில் இருந்து செயல் படும், பனிப்பொழிவு மற்றும் பனி முகடுகள் கண்காணிப்பு அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத் திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in