Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது: மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வலுவாகமீண்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்முரளீதரன் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் கூறியதாவது:

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இதுவரை செயல்படுத்தாத அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்துள்ளது. சீர்திருத்தம், செயல்படு, மாற்றம் கொண்டுவா என்ற தாரக மந்திரத்தை அரசு தீவிரமாக செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும்வங்கி சீர்திருத்தங்கள் சாத்தியமாகிஉள்ளன. இதனால் ஊழல் ஒழிந்துபணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது. நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் கரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய சூழல் எட்டப்பட்டு வருகிறது.

இப்போது 90 சதவீத அந்நிய நேரடி முதலீடுகள் தானியங்கி முறையில் அனுமதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் புத்தாக்க சிந்தனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தொழில் துறை வளர்ச்சிக்கு மிக உதவியாக அமைந்தது. இதன் மூலம் முதலீடுகள் அதிகரித்து புதிய தொழில்நுட்பங்கள் வந்ததோடு நாட்டின் மனித வள திறமைகளை பயன்படுத்தும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலம்மிகச் சிறந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்பதில் இந்திய அரசுக்குஅசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அதிலும் புதிய புத்தாக்க சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போது வெளியாகும் வளர்ச்சி அறிகுறிகள் அனைத்துமே கரோனா வைரஸ்பரவலுக்கு முந்தைய நிலைக்கு உயர்ந்து வருவதைக் காட்டுகின்றன. தொழில் துறை உற்பத்தியும் பழைய நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவின் சுயசார்புபொருளாதாரக் கொள்கையானது, உள்நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டதல்ல. வலுவான சுய சார்புடன் கூடிய இந்தியாவை கட்டமைப்பதே இதன் பிரதான நோக்கம். அதன் மூலம் சர்வதேச விநியோக சங்கிலியை மேலும் வலுப்படுத்துவதுதான் தொலை நோக்கு திட்டம். இவ்வாறு முரளீதரன் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x