Published : 17 Oct 2021 05:24 PM
Last Updated : 17 Oct 2021 05:24 PM

இ-ஷ்ரம் இணையளத்தில் 4 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு: ரூ.2.0 லட்சம் இழப்பீடு பெறலாம்

புதுடெல்லி

அமைப்பு சாரா தொழலாளர்களுக்காக இ-ஷ்ரம் இணையதளம் தொடங்கப்பட்டு 2 மாதத்துக்குள் 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ், கூறுகையில், ‘‘இதில் பதிவு செய்வதன் மூலம், அரசு திட்டங்களின் பயன்களை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் எளிதில் பெற முடியும்’’ என்றார்.

கட்டுமானம், ஆடை தயாரிப்பு, மீன்பிடித் தொழில், நடைபாதை வியாபாரிகள், தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துணை தொழில்களில் ஈடுபடுவோர், போக்குவரத்து துறையில் உள்ளவர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களும் அதிகளவில் பதிவு செய்துள்ளனர்.

இ-ஹ்ரம் இணையளத்தில் பதிவு செய்வதன் மூலம், அனைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும், பல சமூக பாதுகாப்பு திட்டத்தின் பலன்களை பெற முடியும்.

தற்போது வரை 4.09 கோடி தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 50.02 சதவீதம் பேர் பெண்கள், 49.98 சதவீதம் பேர் ஆண்கள்.

ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இந்த இணையதளத்தில் அதிகளவில் பதிவு செய்துள்ளனர்.

கட்டுமானம் மற்றும் வேளாண்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர். ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர், கல்வி, சுகாதாரத்துறை, சில்லரை விற்பனை, சுற்றுலா, விருந்தோம்பல் துறை, உணவுத்துறையினர் உட்பட பலர் இதில் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்களில், 16-40 வயதுக்கு உட்பட்டவர்கள் 65.68 சதவீதம் பேர். 40 வயதுக்கு மேற்பட்டோர், 34.32 சதவீதம் பேர்.

இதில் பதிவு செய்வர்களுக்கு டிஜிட்டல் இ-ஷரம் அட்டை வழங்கப்படும். அவர்களுக்கு தனி கணக்கு எண் வழங்கப்படும். இதில் பதிவு செய்யும் தொழிலாளி விபத்தை சந்தித்து இறந்தாலோ, அல்லது நிரந்தர ஊனம் அடைந்தோலோ ரூ.2.0 லட்சம் பெற முடியும். ஒரு பகுதி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் பெற முடியும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x