பாம்பா ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம்: பத்தனம் திட்டாவில் பெரும் பாதிப்பு

பாம்பா ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம்: பத்தனம் திட்டாவில் பெரும் பாதிப்பு
Updated on
2 min read

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பாம்பா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் கோட்டயம் மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர், 3 பேரின் உடல்களை மீட்டனர். கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால், பம்பா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம் திட்டாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பம்பா நதி நீரி செல்லும் மணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா பகுதியில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பாம்பா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in