Published : 17 Oct 2021 02:38 PM
Last Updated : 17 Oct 2021 02:38 PM

கோவிட் -19 தடுப்பூசி; எண்ணிக்கை 97.65 கோடியைக் கடந்தது

புதுடெல்லி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகள் எண்ணிக்கை 97.65 கோடியைக் கடந்துள்ளது

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,20,772 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 97.65 கோடியைக் (97,65,89,540) கடந்தது. 96,46,485 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,788 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,34,19,749 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.10 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய- மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 112 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 229 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து தற்போது 1,95,846 ஆகா உள்ளது; 220 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.57 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,00,123 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 59.09 கோடி கொவிட் பரிசோதனைகள் (59,09,35,381) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 114 நாட்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.42 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று உறுதி விகிதம் தற்போது 1.29 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 131 நாட்களாக 5 சதவீதத்திற்குக் கீழேயும் 48 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x