Last Updated : 17 Oct, 2021 08:45 AM

 

Published : 17 Oct 2021 08:45 AM
Last Updated : 17 Oct 2021 08:45 AM

பிரிவினைவாத தலைவர் சயத் அலி கிலானியின் பேரன் அரசு வேலையிலிருந்து நீக்கம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை

பிரிவினைவாத தலைவரும், பாகிஸ்தான்ஆதரவாளரான சயத் அலி கிலானி : கோப்புப்படம்

ஸ்ரீநகர்

பிரிவினைவாத தலைவரும், பாகிஸ்தான்ஆதரவாளரான சயத் அலி கிலானியின் பேரன் தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பெயர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

சயத் அலி கிலானி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயத் அலி கிலானியின் பேரன் அனீஸ் உஸ் இல்ஸாம் மட்டுமல்லாது, தோடா பகுதியைச்சேர்ந்த ஒரு ஆசிரியர், ஜம்மு காஷ்மீர் அரசில்ப ணியாற்றும் இரு அரசு ஊழியர்கள் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

அனீஸ் உல் இஸ்லாம், ஆசிரியர் பரூக் அகமது பட் உள்ளி்ட்ட கடந்த 6 மாதங்களில் ஜம்மு காஷ்மீர் அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்தில் அரசுப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புஸ் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீனின் இருமகன்களும், டிஎஸ்பி தேவேந்திர் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளுக்கு உதவி செய்தல் குற்றச்சாட்டில் அனீஸ் உள்ளி்ட்ட 4 பேர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் அனுமதியுடன் 4பேரும் அரசியலமைப்புச் சட்டம் 311(2)(சி)பிரிவின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில்தான் நேரடியாக ஊழியர்கள் முறையிட முடியும்

சயத் அலி கிலானியின் மகன் அல்தாப் அகமது ஷா.இவரி்ன் மகன் அனீஸ் உஸ் இஸ்லாம். அனீஸ் சந்தேகத்துக்குரிய வகையில் ஐக்கியஅரபுஅமீரகம், சவுதி அரேபியா நாடுகளில் சிலருடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது.

அனீஸின் தந்தை தீவிரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கடந்த 2017ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இதற்கிடையே காஷ்மீரில் உள்ள ஷெர்-இ- காஷ்மீர் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி அதிகாரியாக அனீஸ் உஸ் இஸ்லாம் பணியாற்றி வந்தார்.

இந்த பதவிக்கு வரும் முன், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 31ம் ேததி முதல் ஆகஸ்ட் 7ம் தேதிவரை பாகிஸ்தானுக்கு அனீஸ் பயணம் செய்தார். அப்போது கிலானியின் நண்பரான பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் கர்னல் யாசிரைச் சந்தித்து அனீஸ் பேசியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து அனீஸ் திரும்பும்போது, ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியை கொலை செய்தது தொடர்பாக பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்துக்குப்பின் ஜம்மு காஷ்மீர் அரசு விதிமுறையில் ஏதோ திருத்தம் செய்து, ஆராய்ச்சி அதிகாரியாக அனீஸ் உஸ் இஸ்லாம் நியமிக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பதவிக்கு வரும் முன் அனீஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ட்ரோன் விமானங்களை பறக்கவிட்டு, சட்டம் ஒழுங்கு சூழலை படம் எடுத்தும் வந்தார். இந்த ட்ரோன் காட்சிகள் அனைத்தும் பின்னர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு பரிமாறப்பட்டன என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

எந்தவிதமான சட்டவிதிகளையும், நியமன விதிகளையும் பின்பற்றாமல் புர்வானி கொலைக்குப்பின் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அனீஸ் கெஜட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டிலிருந்து காலியாக இருந்த ஆராய்ச்சி அதிகாரி பதவிக்கு அனீஸ் நியமிக்கப்பட்டது அனைவருக்கும் வியப்பளித்தது. மிகவும் அதிகாரமிக்க, பல்வேறு முக்கிய விவிஐபிக்களுடன் கூட்டம் நடத்துதல், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறி்த்து ஆலோசித்தல், கருத்தரங்கள், பயிலரங்கம் நடத்துதல் போன்றவற்றுக்கு அதிகாரம், அனுமதி அளிக்கும் பதவியாகும்.இந்த பதவியிலிருந்து அனீஸ் நீக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x