மத மாற்றம் குறித்து புகார்கள்- தேவாலயங்களில் ஆய்வு செய்ய கர்நாடக முதல்வர் உத்தரவு

மத மாற்றம் குறித்து புகார்கள்- தேவாலயங்களில் ஆய்வு செய்ய கர்நாடக முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற புகார்கள் குறித்து விசாரிக்கவும் சிறுபான்மையினர் ஆணைய அனுமதியின்றி இயங்கும் தேவாலயங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பசவராஜ் உத்தரவிட்டார்.

மேலும் மதமாற்ற புகார் தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்ய, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலசட்டப்பேரவை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவை குழுவின் தலைவர் கூலிஹட்டி சேகர் கூறும்போது, “கர்நாடகாவில் சுமார் 3,000 கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. அவற்றில் 1,790 தேவாலயங்கள் மட்டுமேஅனுமதி பெற்றுள்ளன. சில பாதிரியார்கள் புதிய சபைகள், ஆலயங்களை உருவாக்கி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். மதமாற்றம் நடைபெற்ற இடங்களில் எங்களது குழுவினர் சென்று ஆய்வுசெய்ய இருக்கிறோம்” என்றார். இதுகுறித்து பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in