

இந்திய விண்வெளி கழகத்தால் (இஸ்ரோ) செவ்வாய் கிரகத் துக்கு அனுப்பப்பட்ட மங்கள் யான் விண்கலம் வெற்றிகரமாக தனது 70 சதவீத பயணத்தை முடித்திருக்கிறது. இது திட்ட மிட்டபடி தடைகளைத் தாண்டி நிச்சயம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள் யான்' விண்கலம் அனுப்பப் பட்டது. ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண் கலத்தில் 4 சிறிய ரக ராக்கெட் இன்ஜின்கள் பொருத்தப்பட் டுள்ளன.
பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் 680 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்த மங்கள்யான் விண்கலம், இதுவரை 466 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. சுமார் 70 சதவீத பயணத்தை முடித்துள்ள இது, ஒரு வினாடியில் 28 கி.மீ. தூரத்தை கடக்கக்கூடியது. இதுவரை இந்தியா அனுப்பிய விண்கலங்களிலே மங்கள்யான் தான் மிக வேகமாக பயணிக் கக் கூடியது என்பது குறிப்பிடத் தக்கது.
மங்கள்யானில் உள்ள 4 இன்ஜின்கள் கடந்த புதன் கிழமையில் இருந்து இயங்க ஆரம்பித்துள்ளன. இயக்கும் பணி பெங்களூரிலிருந்து 16 வினாடிகளில் செய்து முடிக் கப்பட்டது. இதை இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் மிகவும் கவனிப்புடன் திட்ட மிட்டப்படி செய்து முடித்தனர். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுடைய மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவுக்கு பெருமை கிடைக்குமா?
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இது மிகவும் சவாலான பயணம. மிகப்பெரிய பொருட்செல வில் மங்கள்யான் உருவாக்கப் பட்டுள்ளதால், இந்திய விஞ்ஞானி கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்துள்ளனர். பெங்க ளூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் இருந்து மங்கள் யானுக்கு அனுப்பும் சமிக்ஞை 5 நிமிடங்களுக்கு பிறகு சென்றடைகிறது.
எனவே, இந்த விண்கலம் செவ்வாயை அடைவதுவரை அனைத்து தயாரிப்பு பணி களையும் திட்டமிட்டு செய்து முடித்துள்ளோம்.
தற்போது சிவப்பு நட்சத்திர பாதையை அடைந்துள்ள மங்கள் யான், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. தனது கடினமான பாதையின் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு மங்கள்யான் நிச்சயம் இலக்கை அடையும் என எதிர்பார்க் கிறோம்'' என்றார்.
இஸ்ரோ திட்டப்படி மங்கள் யான் பயணித்தால், வரும் செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடையும். அதற்கு முன்னதாக செவ்வாய் கிரகத்தை நெருங்கியதும் அதன் சுற்று வட்டப் பாதையில் மங்கள்யானை நிலை நிறுத்துவது இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.
இதுவரை செவ்வாய் கிரகத் துக்கு ஆராய்ச்சிக்காக பல்வேறு நாடுகள் அனுப்பிய 51 விண் கலங்களில் 20 சதவீதம் மட்டுமே வெற்றிகரமாக சென்றடைந் திருக்கிறது.
அதிலும் 2 நாடுகளின் விண்கலங்கள் மட்டுமே முதல் முயற்சியிலே செவ்வாய் கிர கத்தை வெற்றிகரமாக சென் றடைந்துள்ளன.
மங்கள்யான் செவ்வாய் கிர கத்தை சென்றடைந்தால், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக சென் றடைந்த 3-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.