

கரோனா நெருக்கடி காலத்துக்குப்பின்பு, பொருளாதாரம் வேகத்துடன் திரும்பியதால், ஒட்டுமொத்த உலகமும், இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத்தில் உள்ள சூரத்தில் சவுராஷ்டிரா பட்டேல் சேவா சமாஜத்தால் கட்டப்படவுள்ள முதல் கட்ட மாணவர் விடுதியின் பூமிப் பூஜை விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசியப் பிரதமர் கூறியதாவது:
சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியா தற்போது உள்ளது. புதிய தீர்மானங்களுடன், இந்தப் பொன் விழாக் காலம், பொது உணர்வை எழுப்பியதில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களை நினைவுக் கூற நம்மை தூண்டுகிறது. அவர்களைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்துக் கொள்வது மிக முக்கியம்.
கல்வியை பரப்புவதற்காகவும், கிராம வளர்ச்சியை தூண்டுவதற்காகவும், இந்த இடம் உருவாக்கப்பட்டது. குஜராத் முதல்வராக பணியாற்றிய 2001ம் ஆண்டிலிருந்து குஜராத்துக்கு சேவை செய்ய மக்களால் ஆசிர்வதிக்கப்படேன். அதுதான் 20 ஆண்டுக்கும் மேலாக எந்த இடைவெளியும் இல்லாமல் குஜராத் மக்களுக்கும் அதன்பின் ஒட்டு மொத்த நாட்டுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வைத்தது. முன்பு குஜராத்தில் நல்லப் பள்ளிகள் மற்றும் நல்லக் கல்விக்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. அனைவருடனும், அனைவரின் வளர்ச்சி என்பதன் சக்தியை குஜராத்திலிருந்துதான் நான் கற்றேன். இப்பிரச்னையை தீர்க்க, அவர் மக்களுடன் இணைந்திருந்தேன்.
புதியக் கல்வி கொள்கையில், தொழில் கல்விப் படிப்புகளை உள்ளூர் மொழியில் கற்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது படிப்புகள் பட்டங்களுடன் முடிவடைவதில்லை, திறமைகளுடனும் இணைக்கபபடுகிறது. நாடு தற்போது, தனது பாரம்பரியத் திறன்களை நவீன சாத்தியங்களுடன் இணைக்கிறது .
கரோனா நெருக்கடி காலத்துக்குப்பின்பு, பொருளாதாரம் வேகத்துடன் திரும்பியதால், ஒட்டுமொத்த உலகமும், இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா மீண்டும் இருக்கப்போகிறது என சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி கூறினார்.