

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில், அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறேன். வலிமையான, வளமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்க அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நாட்டு மக்களுக்கு அவர் எப்போதும் ஒரு உத்வேகமாக இருப்பார்’’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.