

இந்தியாவில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18ஆயிரத்து 987 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 40 லட்சத்து 20ஆயிரத்து 730 ஆகஅதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.07 ஆகஉயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 6ஆயிரத்து 586 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,067பேர் குறைந்துள்ளனர். தொடர்ந்து 20 நாட்களாக கரோனாவில் புதிதாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 51 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 58 கோடியே 76 லட்சத்து 64 ஆயிரத்து 525 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 13 லட்சத்து ஆயிரத்து 83 பரிசோதனைகள் கடந்த 24 மணிநேரத்தில் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரத்து 709 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 96.82 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.