

‘என்கவுன்ட்டர்’ என்ற வார்த் தையைப் போலவே, ‘ஸ்டிங்’ (ரகசியமாக ஒரு செயலை வீடியோவில் பதிவு செய்வது ஸ்டிங் ஆபரேஷன்) என்ற வார்த்தைக்கும் இப்போது மதிப்பில்லாமல் போய்விட்டது. இந்த 2 வார்த்தைகளும் எப்படி நம்பகத்தன்மையை இழந்தன என்பதை பார்ப்போம்.
கடந்த 1980-ம் ஆண்டுகளில் காலிஸ்தான் சீக்கிய பிரிவினை வாத இயக்கம் செல்வாக்குடன் இருந்தபோது, என்கவுன்ட்டர் என்ற வார்த்தை மக்களிடம் பிரபலமானது. பின்னர் தீவிரவாதிகள் ‘என்கவுன்ட்டரில்’ கொல்லப் பட்டனர் என்று செய்திகள் வெளிவருவது வழக்கமாகிவிட்டது. கடந்த 1990-ம் ஆண்டுகளில் நிழல் உலக தாதாக்களை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டரில் அப்பாவிகள் சிலரும் இறந்தனர்.
அதேபோல் ‘ஸ்டிங்’ என்ற வார்த்தை கெட்டதாக ஏன் மாறி யது. ஊடகங்களில் ஸ்டிங் ஆபரேஷன் என்பதை கடந்த 15 ஆண்டு களுக்கு முன்னர் தெஹல்கா பத்திரிகைதான் தொடங்கியது. அதன்பின் சிறிய வீடியோ கேமராக்கள் மூலம் உளவு பார்க்கும் தொழில்நுட்பம் எல்லா துறைகளுக்கும் சாத்தியமானது. கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மேட்ச் பிக்சிங் பற்றி பேசியதை தெஹல்கா வீடியோ எடுத்து வெளியிட்டது. அதில் முகமது அசாருதீன் உள்ளிட்ட வீரர்கள் சிலரின் பெயர்கள் இடம்பெற்றன. அதன்பின் என்ன நடந்தது?
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தென் ஆப்பிரிக் காவின் ஹன்சி குரோன்ஜி உட்பட சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையும் பெற்றனர். இந்தியா வில் இந்த விவகாரம் ஏனோதானோ என்று முடிந்துவிட்டது.
அசாருதீனுக்கு வழங்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. அவர் அரசியலில் சேர்ந்து மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டார். அசாருதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தும் குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. அதில் இருந்து தப்பிவிட்டார். ஆனால், குரோன்ஜியால் அப்படி செய்ய முடியவில்லை. உண்மையில் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் யாரும் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
எனவே, ஸ்டிங் நடவடிக்கையால் கடைசியாக என்ன பலன் கிடைத்தது. அதை சொல்வது மிகவும் கடினம். கிரிக்கெட்டில் ஊழல் தொடர்ந்து இருக்கிறது. ஐபிஎல் உட்பட பல போட்டிகளில் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் வீரர்கள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். ஸ்டிங் நடவடிக்கைகளால் எந்த தெளிவான தீர்ப்பும் கிடைக்கவில்லை.
இந்த மாதம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், அமைச் சர்கள், கட்சியினர் என 12-க்கும் மேற்பட்டோர் லஞ்சம் பெறும் (ஸ்டிங்) வீடியோக்கள் வெளியா யின. ஆனால், கட்சி தலைவர் மம்தா என்ன நடவடிக்கை எடுத்தார். ‘இது எதிர்க்கட்சிகளின் சதி’ என்று கூறினார்.
ஸ்டிங் நடவடிக்கைகள் இந்தியா வில் தோல்வி அடைவதற்கு 2 காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தார்மீக பொறுப் பேற்கும் மனநிலை நம்மிடம் வலுவானதாக இல்லை. நமது ஒழுக்க நெறிகள் வளைந்து கொடுப்பதாக உள்ளன. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், லாலு போன்ற தண்டனை பெற்ற தலைவர்கள்கூட அரசியலில் நீடிக்கின்றனர்.
இடைத்தரகர்கள் அதிகார மிக்கவர்களாக மாறிவிட்டனர். ஊழலும் சேர்ந்தது வாழ்க்கை யாகிவிட்டது. இந்த கலாச்சாரத்தால் ஸ்டிங் நடவடிக்கை எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
உதாரணத்துக்கு, குஜராத்தில் இளம்பெண்ணை உளவு பார்க்க போலீஸாருக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. ஸ்டிங் நடவடிக்கையால் பாஜக தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் தண்டிக்கப்பட்டார். ஊழல் குற்றத்துக்காக சிறைக்கும் சென்றார். ஆனால், பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். தனது வீட்டில் காலமானார்.
2-வது காரணம், நமது ஊடகங்களும் அடிக்கடி தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி விடுவதால் ஸ்டிங் நடவடிக் கையால் பலன் கிடைப்பதில்லை. ஜீ டிவி ஆசிரியர் கார்ப்பரேஷனிடம் லஞ்சம் கேட்டது ஸ்டிங் நடவடிக்கை மூலம் அம்பலமானது.இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட் டார். ஆனாலும் தனது பதவியில் நீடிக்கிறார். தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால், பெண் செய்தியாளரிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது. இதுபோல் பல விஷயங்கள் திருப்தி இல்லாமல் முடிந்து விடுகின்றன.
டெல்லி முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கேஜ்ரிவால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரகசியமாக வீடியோ எடுத்து கொடுங்கள். அவர்களை தண்டிக்கிறேன் என்று பொதுமக்களை ஊக்கப் படுத்தினார். எனக்கு தெரிந்து எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
இப்போதைக்கு திரிணமூல் கட்சியினர் லஞ்சம் வாங்கிய வீடியோ விவகாரம், மேற்குவங்க தேர்தலில் அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கும். தெஹல் காவில் தொடங்கிய ஸ்டிங் நடவடிக்கை இப்போதுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது. எனினும் ஊழல் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் உஷாராகி விட்டனர்.