

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து வேலூருக்கு டிப்பர் லாரி மூலம் கடத்தப்படவிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து திருப்பதி வனத் துறை சரக அதிகாரி பாலவீரய்யா செய்தியாளர்களிடம் கூறியது: வனத்துறை ஊழியர்கள் திருப்பதி-சித்தூர் நெடுஞ்சாலையில் திங்கள் கிழமை நள்ளிரவு வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் இருந்து 2 பேர் தப்பி ஓடினர். பின்னர் அந்த லாரியை சோதனை யிட்டதில் அதில் 1,100 கிலோ செம் மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சமாகும். லாரியும், செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பாலவீரய்யா தெரிவித்தார்.