

தெலங்கானா மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துச் சொல்லியுள்ள ஒமர் அப்துல்லா, தனது ட்விட்டர் பக்கத்தில்: கிளப்#29-க்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போராட்டத்தின் பலனாக ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா இன்று உதயமாகியுள்ளது.