

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள், அமைச்சர்களின் பதில்கள் உள்ளிட்டவற்றின் சுருக்கமான விவரம் வருமாறு:
எல்லையில் அத்துமீறல் - உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 2015-ம் ஆண்டு 405 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 16 பொதுமக்கள் இறந்துள்ளனர். 71 பேர் காயமடைந்துள்ளனர். 72 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தேர்தலுக்கு சிறப்பு ரயில் - ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:
உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. விழாக்காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கும் திட்டத்தின் கீழ், தேர்தலின்போதும் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஐஎஸ் தொடர்புடைய 24 பேர் கைது: உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:
ஐஎஸ் தொடர்புடையவர்கள் சிலர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் உள்ளூர் போலீஸார் சில மாநிலங்கில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை என்ஐஏ ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.