

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (அக்.14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரித்தனர்.
இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. இன்று ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெய்டு நடந்தபோது ஆர்யன் கான் அந்த இடத்தில் இல்லை. அவரிடம் பணமோ, போதைப் பொருளோ இல்லை. அவரும் போதை மருந்து உட்கொண்டிருந்திருக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் ஆர்யன் கானை முதன்மைக் குற்றவாளியாக சேர்த்துள்ள என்சிபி, ஆர்யனின் வாட்ஸ் அப் சாட்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் ஆர்யன் கான் போதைப் பொருளை பெற்றது உறுதியாகியுள்ளது. அவரை வெளியில்விட்டால் அவர் தனது அதிகாரமிக்க பின்புலத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று வாதிட்டது.
ஜாமீன் மனு மீது மீண்டும் நாளை விசாரணை நடைபெறுகிறது.