இந்தியாவில் புதிதாக மேலும் 15,823 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 226 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,823 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 7,823 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுபோலவே நேற்று ஒரே நாளில் 226 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 106 பேர் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,07,653 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 15,823.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,40,01,743.
இதுவரை குணமடைந்தோர்: 3,33,42,901
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 22,844.
கரோனா உயிரிழப்புகள்: 4,51,189.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 226
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,07,653.
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 96,43,79,212 . இதில் நேற்று மட்டும் 50,63,845 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
