கேஜ்ரிவால் வீடு முற்றுகையின்போது டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி காயம்

கேஜ்ரிவால் வீடு முற்றுகையின்போது டெல்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி காயம்
Updated on
1 min read

நவராத்திரி பண்டிகையை ஒட்டி வடமாநிலங்களில் நடக்கும் சாத்பூஜை விழாவுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. தடையை நீக்கக்கோரி பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு டெல்லி தொகுதி எம்.பி. மனோஜ் திவாரி தலைமையில் பாஜகவினர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடச் சென்றனர்.

கேஜ்ரிவால் வீட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்புகளை போலீஸார் வைத்திருந்தனர். தடையை மீறி முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எம்.பி. மனோஜ் திவாரி தடுப்பை தாண்ட முயற்சித்து தடுப்பின் மீது ஏறினார். போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது தடுப்பில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் மனோஜ் திவாரி காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் வர்மா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in