

தலைநகர் டெல்லிக்குத் தேவையான மின்சாரத்தை முழு அளவில் வழங்குமாறு என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அண்மையில் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மின்உற்பத்தி நிலையங்களின் தேவைகளை சந்திக்கும் அளவுக்கு போதிய அளவு நிலக்கரி உள்ளதாகவும், இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
டெல்லிக்குத் தேவையான மின்சாரத்தை முழு அளவில் வழங்குமாறு என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த பத்து நாட்களில் டெல்லி டிஸ்காம்களுக்கு அறிவிக்கப்பட்ட மின்திறனைக் கருத்தில் கொண்டு, மத்திய மின் துறை அமைச்சகம் 10.10.2021 அன்று என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு தில்லிக்குப் போதுமான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது டெல்லியின் மின் விநியோக நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும்.
அதற்காக பின்வரும் வழிகாட்டுதல்கள், அளிக்கப்பட்டுள்ளன:
மேலும் எந்தவொரு மாநிலமும், மின்சார பரிமாற்றத்தில் அதனை விற்காமலோ அல்லது ஒதுக்கீடு செய்யாமலோ இருந்தால் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மின்சாரம் தற்காலிகமாக குறைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். இந்த மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.