Published : 12 Oct 2021 04:40 PM
Last Updated : 12 Oct 2021 04:40 PM

உள்நாட்டு விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: 18-ம் தேதி முதல் 100% இயக்க அனுமதி

கோப்புப் படம்

புதுடெல்லி

நாடுமுழுவதும் அக்டோபர் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் 100 சதவீதம் இயக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

2 மாதங்களுக்குப் பின் மே 25-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 1.30 லட்சம் பயணிகள் பயணித்தனர். டெல்லியில் மட்டும் 380 விமானங்கள் முதல்கட்டமாக இயக்கப்பட்டன. பின்னர் சிறிது சிறிதாக விமானங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் திறனை 72.5 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. எனினும் தற்போது வரை 100 சதவீத விமானங்கள் இயக்கப்படவில்லை.

அதுபோலவே உள்நாட்டு விமானச் சேவையில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும், அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்,
பயணம்செய்யும் போது அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்திருக்க வேண்டும், மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாடுமுழுவதும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான பயணம் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம் விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் எந்த தடையும் இல்லாமல் பயணிகள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.

எனினும் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதையும், பயணத்தின் போது கோவிட்-பொருத்தமான நடத்தை கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x