Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 2019-20 நிதியாண்டில் ரூ.447 கோடி திரட்டிய 14 மாநில கட்சிகள்

புதுடெல்லி

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் 2019-20-ம் ஆண்டில் ரூ.447 கோடி நன்கொடை பெற்றதாக 14 மாநிலக் கட்சிகள் அறிவித்துள்ளன.

தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் கட்சிகள் நன்கொடை பெற்ற விவரங்களை சேகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-20-ம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிவசேனா, சமாஜ்வாதி, உள்ளிட்ட 14 கட்சிகள் ரூ.447.49 கோடி நிதி திரட்டி உள்ளன.

இதில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அதிக அளவாக ரூ.130.46 கோடி நிதி பெற்றுள்ளது இது அக்கட்சியின் மொத்த வருமானத்தில் 14.86 சதவீதமாகும். அடுத்தபடியாக சிவசேனா கட்சி ரூ.111.403 கோடி நிதி பெற்றுள்ளது. இது அக்கட்சியின் வருமானத்தில் 12.69 சதவீதமாகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.92.739 கோடி நிதி பெற்றுள்ளது.

2019-20-ம் ஆண்டில் 42 மாநிலக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.877.957 கோடியாகும். இதில் 2018-19, 2019-20 நிதியாண்டுகளில் 23 கட்சிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. 16 கட்சிகளின் வருவாய் குறைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் தங்கள் வருவாயின் ஒரு பகுதி செலவிடப்படவில்லை என்று 24 மாநிலக் கட்சிகளும் வருவாய்க்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக 18 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x