Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

ராஜஸ்தான் தலித் இளைஞர் கொலையில் மவுனம் காப்பது ஏன்?- காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி கேள்வி

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ஹனு மன்ஹர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காதல் விவகாரம் ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். ஆனால், போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

ராஜஸ்தானில் தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் அம்மாநில காங்கிரஸ் அரசும், போலீஸாரும் மெத்தனம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு மவுனம் சாதிப்பதற்கு என்ன காரணம்?

உத்தரபிரதேசத்தில் பாஜகவினரால் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத் தினருக்கு பஞ்சாப் முதல்வரும், சத்தீஸ்கர் முதல்வரும் (காங்கிரஸ் ஆளும்மாநிலங்கள்) இழப்பீடு வழங்குகிறார்கள். அதேபோல, ராஜஸ்தானில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினருக்கு அவர்கள் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவார்களா? அப்படி இல்லையெனில், இனியும் தலித் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கக் கூடாது.

இவ்வாறு மாயாவதி தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x