

பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் ஷங்கர் (55). மருத்துவரான இவர் நேற்று முன்தினம், தனது வீட்டில் பணியாற்றும் பெண் மற்றும் அந்த பெண்ணின் குழந்தையுடன் காரில் சென்றுள்ளார்.
ஜெயநகரில் இருந்து 5 கி.மீ.தூரம் தறிகெட்டு ஓடிய கார், சாலையின் ஓரமாக நின்ற ரிஸ்வான் மற்றும் அவரது மனைவி மவுஸினா ஆகியோர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரிஸ்வான் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல 2 இரு சக்கர வாகனம் மற்றும் 2 கார்களில் சென்றவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷங்கரை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் ஷங்கர் குடி போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.