

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மாநிலங்களவையில் நேற்று உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக மாநிலங் களவைத் தலைவரிடம் அவர் அளித்த கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கடந்த 26-ம் தேதி அவை யில் நடந்த விவாதத்தின்போது அமைச்சர் இரானி என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை கூறினார். துர்கா தேவியை பற்றி நான் அவதூறு பேசியதாக அபாண்டமாக குற்றம் சாட்டினார். அதன்பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் எம்.பி.யாக பணியாற்றவிடாமல் இரானி தடுக்க முயல்கிறார். இதை அவை உரிமை மீறல் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.