

2024ம் ஆண்டிலும் பிரதமராக மோடிதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காந்திநகர் தொகுதி மக்களவை எம்.பியான அமித் ஷா ஒருநாள் பயணமாக நேற்று வந்திருந்தார். காந்திநகர் ரயில்நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் தேநீர் கடை, கோலோல் நகரில் ஆரம்ப சுகதாார நிலையம் ஆகியவற்றையும் அமித் ஷா நேற்று தொடங்கிவைத்தார்.
காந்திநகரில் மாவட்டத்தில் உள்ள பான்சர் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி மக்கள் சேவைக்கு வந்து நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. உலகில் எந்த ஒரு தலைவரும் இதுபோன்ற சாதனையைச் செய்ததில்லை. தொடர்ந்து 20 ஆண்டுகளாக மக்கள் ேசவைக்காக இடைவிடாது தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.
ஜனநாயக நாடுகளில் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் பிரதிநிதிகளை மாற்றித் தேர்்ந்தெடுப்பார்கள். ஆனால், இத்தனை நீண்ட காலமாக ஒரு தலைவர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதும் சேவை செய்வதையும் பார்க்க முடியாது. கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல்குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றார். இப்போது ேதசத்தின் பிரதமராகஇருக்கும் மோடி, 2024ம் ஆண்டிலும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
பிரதமர் மோடி தொடர்ந்து மக்கள் சேவைப்பணியில் இருக்கிறார் என்றால், மக்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து வருவதால்மட்டும்தான். எவையெல்லாம் முழுமையடையாமல் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி எப்போதும் கவனிப்பார். தேசத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும், மாநிலங்களைப் பற்றியும், ஏழைகள் பற்றியும் அக்கறையுடன் இருக்கும் தலைவரை இனிமேல் பார்க்க முடியாது.
காங்கிரஸ் அரசு கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை மோடி தலைமையிலான அரசு கடந்த 7 ஆண்டுகளில் செய்துவிட்டது. 60கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு, 10 கோடி கழிவறைகள், 5 கோடி மக்களுக்கு மின்சாரம் ஆகியவற்றை மோடி அரசுவழங்கியுள்ளது.
இ்வ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.