Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

100 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6 பெண்கள்

புதுடெல்லி

இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 6பெண்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் (71) ரூ.1.34 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார்.

இதற்கடுத்து ஹேவல்ஸ் நிறுவனத்தின் வினோத் ராய் குப்தா (76) பட்டியலில் ரூ.56,782 கோடிசொத்து மதிப்புடன் 24-ம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லீனா திவாரி (43) ரூ.32,874 கோடி சொத்து மதிப்புடன் 43-ம் இடத்தில் உள்ளார்.

பைஜூஸ் நிறுவனத்தின் இணைநிறுவனர் திவ்யா கோகுல்நாத் (35) பட்டியலில் 47-ம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.7,477 கோடி உயர்ந்து ரூ.30,265 கோடியாக உள்ளது.

பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா (68) பட்டியலில் 53-ம் இடத்தில் உள்ளார். 2020-ல் ரூ.34,375 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டில் ரூ.29,144 கோடியாகக்குறைந்துள்ளது. டாஃபே குழுமத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.21,596 கோடி சொத்து மதிப்புடன் 73-ம் இடத்தில் உள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x