Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

பழைய வாகனத்தை அழித்துவிட்டு புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு வரியில் 25% வரையில் தள்ளுபடி

பழைய வாகனத்தை அழித்துவிட்டுபுதிய வாகனம் வாங்குபவர்களுக்கு வாகன வரியில் 25 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பழைய வாகனங்கள் தொடச்சியான பயன்பாட்டில் இருந்தால் அது சுற்றுசூழலில் அதிகம் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகபயன்பாட்டில் இருக்கும் தனிநபர்வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவற்றில் தேர்ச்சியடையாத வாகனங்களை அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.

ஸ்கிராப்பிங் மையத்தில் வாகனத்தை அழித்தற்கான சான்றிதழ்வழங்கப்படும். இந்தச் சான்றிதழைக் காட்டி புதிய வாகனம் வாங்கும்போது அதன் விலையில் 5 சதவீதம் அளவில் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறைஅமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வாகன வரியிலும் 25 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

தனிநபர் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 சதவீதம்வரையிலும் வாகன வரியில் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. இது 2022 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x