ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் போனஸ் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதியாண்டில் 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்து இருந்தது.

இந்தநிலையில் ரயில்வே துறையின் பரிந்துரையை ஏற்று ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டார். அவர் அப்போது கூறியதாவது:

2020-201 ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர். அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்கள் போனஸ் பெறுவர்.

இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in