காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம், ஹண்டு வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் அப் பகுதிக்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், 4 ரேடியோ செட், ஜிபிஎஸ் கருவிகள், 2 வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
இத்தீவிரவாதிகள் வெளிநாட்டி னராக இருக்கலாம் என கருதப் படுகிறது. இவர்களின் உடல் களை உள்ளூர் இடுகாட்டில் பொது மக்கள் உதவியுடன் போலீஸார் நேற்று அடக்கம் செய்தனர்.
பாதுகாப்பு தணிக்கை
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தணிக்கைக்கு பிறகு சில இடங்களில் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் எம்.என்.வோராவிடம் காவல் துறை தலைவர் கே.ராஜேந்திர குமார் மற்றும் பிற படைகளின் தலைவர்கள் நேற்று தெரிவித் தனர்.
