

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித் துள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.45 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல் வேறு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ரூ.117 கோடி மதிப்பிலான 165 திட்டங்களை மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்க ஏராள மான பாஜகவினர் வாகனங்களில் சென்றனர். அப்பகுதியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தை அவர் கள் கடந்து சென்றனர். அப்போது ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் விவசாயிகள் சிலர் உயிரிழந்தனர்.
ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினரின் வாகனங்கள் மீது தாக்கு தல் நடத்தினர். 2 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இருதரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, "மத்திய உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வேண்டுமென்றே விவசாயிகள் மீது காரை மோத செய்தார். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர்.
இதை மறுத்துள்ள பாஜகவினர், "வாகனங்களை குறிவைத்து விவசாயி கள் கற்களை வீசி தாக்குதல் நடத் தினர். இதில் ஒரு கார் நிலை தடுமாறி விவசாயிகள் மீது மோதியது. காரில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்" என்று குற்றம் சாட்டினர்.
லக்கிம்பூர் கலவரம் காரணமாக உத்தர பிரதேசத்தில் பதற்றம் நிலவு கிறது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அரசு, போலீஸ் உயரதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களுக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடும் காயமடைந்த விவ சாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப் பீடும் வழங்கப்படும். உயிரிழந்த விவ சாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்தது.
30 பேர் மீது வழக்கு
கலவரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 30 பேர் வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
கலவரம் குறித்து போலீஸ் வட் டாரங்கள் கூறும்போது, "லக்கிம்பூரில் வாகனம் மோதியதில் விவசாயிகள் நட்சத்திரா சிங் (55), தல்ஜித் சிங் (35), லாவேபிரித் சிங் (20), குருவேந்திர சிங் (18) உயிரிழந்தனர். பாஜக தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரத்தன் காஷ்யப் என்ற செய்தியாளரும் கல வரத்தில் உயிரிழந்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் வாகனம் மோதி அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தன.
போலீஸ் உயரதிகாரி பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறும்போது, லக்கிம்பூர் கலவரம் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப் படும். 8 நாட்களில் உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப் படுவார்கள்" என்று தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்
முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, "விவசாயிகள், பொது மக்கள் அமைதி காக்க வேண்டும். கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை வரும் வரை பொறுமை காக்க வேண்டும். பொய்களை நம்ப வேண்டாம். கலவரத்துக்கு காரண மானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
மத்திய இணையமைச்சர் அஜஸ் மிஸ்ரா கூறும்போது, "நானோ, எனது மகனோ சம்பவ இடத்தில் இல்லை. எங்கள் மீது உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டப்படுகிறது" என்று தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி கைது
கலவரத்தில் உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களை சந்திக்க காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அதிகாலை லக்கிம் பூருக்கு சென்றார். சீதாபூரில் அவர் கைது செய்யப்பட்டு அங்குள்ள விருந் தினர் மாளிகையில் தங்க வைக்கப் பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து விருந்தினர் மாளிகையை தூய்மை செய்யும் பணியில் பிரி யங்கா காந்தி ஈடுபட்டார்.
வீட்டுக் காவலில் அகிலேஷ்
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூருக்கு செல்வேன் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை கண் டித்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
பஞ்சாப் துணை முதல்வர் சுகீந்தர் நேற்று லக்கிம்பூருக்கு செல்ல முயன் றார். அவரது கார் சஹரான்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர் கள் பலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் இணையசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.