

வருமான வரி செலுத்துவோர் வரம்புக் குள் புதிதாக 40 லட்சத்துக்கும் அதிக மானோர் சேர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோரின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளதால் இப் போது வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிபிடிடி தலைவர் அதுலேஷ் ஜிண்டால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு வருமான வரி மூலமான வருவாய் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வரி வரம்புக்குள் புதியவர்களைக் கொண்டு வருவதில் நவீன தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட கூடுத லாக 40 லட்சம் பேர் இந்த வரம்புக்குள் வந்துள்ளனர். புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரு கோடி பேரை வருமான வரி செலுத்துவோர் வரம்புக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தும் தகுதியுடைய நபர்கள், அவர்களது வருமானத்தைக் குறைத்து வரி செலுத்தாமலிருப்பதை வருமான வரித்துறை தங்களிடம் உள்ள தகவல் தொகுப்பு மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. இது தவிர நவீன தொழில்நுட்ப உத்தியும் (என்எம்எஸ்) பின்பற்றப்படுகிறது.
இவ்விரண்டு அணுகுமுறை மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் இப்பட்டிய லில் சேர்ந்துள்ளதாக ஜிண்டால் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் விரைவாக தொகையை திரும்ப அளிக்கும் சேவையும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.