

திருப்பதி நகரம் மற்றும் திருமலையில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வெப்பத்தில் தவிக்கின்றனர்.
திருமலையில் பக்தர்களை வெயிலிலிருந்து காக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 4 மாட வீதிகளிலும் வெறும் காலில் நடக்கும் பக்தர்களுக்காக, வெப்பத்தை கட்டுப்படுத்தும் வெண்ணிற வர்ணம் பூசப்பட்டு வருகிறது.